Latest News

புதிய படிப்புகள் மற்றும் புதிய தொழில்கள்

பெட்ரோலியம் : 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
உலக கச்சா எண்ணெய் வளத்தில் 43 விழுக்காட்டையும் இயற்கை எரிவாயு வளத்தில் 23 விழுக்காட்டினையும் தன் வசம் வைத்து உலகப் பொருளாதாரத்தில் தனி ஆளுமை செலுத்தும் அரபு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு, பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை போன்றவற்றில் இனி வரும் காலங்களில் தங்களது முதலீடுகளை அதிகப்படுத்தி விரிவாக்க இருக்கின்றன.
கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து அதை அப்படியே ஏற்றுமதி செய்வதில் தான் அதிக கவனம் செலுத்தினர். இனி வரும் காலங்களில் உள்நாட்டிலேயே கச்சா எண்ணெயை சுத்திகரித்து பல திரவங்களாக மாற்றி, மதிப்புக்கூட்டி, விற்பனை செய்யத் திட்டமிட்டு அவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான சுத்திகரிப்பு நிலையங்களும் அது தொடர்பான தொழிற்சாலைகளும் பெருகி வருகின்றன...
தற்சமயம் உலக அளவில் பல நாடுகளிலும் எண்ணெய்வளம் கண்டறியப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் போட்டியைச் சமாளித்திட நவீனத்தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதோடு சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ற CLEANER FUELS (Compressed natural gas (CNG); Liquiefied Pertolium gas (LPG);  City diesel hydrogen; alchohol fuels and battery operated vehicles) என்றழைக்கப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத எரிவாயு நகரங்களை ஏற்படுத்துவதிலும் பெரிய அளவிலான முதலீடுகள் செய்யப்படுகின்றன.
உலகிற்கு எரிசக்தி வழங்குவதில் தற்போதைய நிலையைத் தக்க வைத்துக்கொள்ளவும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொண்டு வெற்றி பெறவும் பெட்ரோலியம் மற்றும் அது சார்ந்த துறைகளில் தான் அரபு நாடுகள் தங்களின் செல்வத்தை முதலீடுகளாகக் கொட்ட இருக்கின்றன.
இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் ஏறக்குறைய 3 இலட்சம் திறன் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் இந்த பெட்ரோலியத் துறையில் மட்டும் தேவைப்படுகின்றனர் என்று அரபு நாடுகளின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இந்த அரிய வாய்ப்பை முஸ்லிம் சமூகம் பயன்படுத்திட இன்றே திட்டமிடுங்கள். 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் வாய்ப்பைப் பெறாதவர்கள் பெட்ரோலியத் துறை சார்ந்த அனைத்துப் படிப்புகளையும் கற்றுத்தரும் மத்திய அரசின் பெட்ரோலிய பல்கலைக்கழகம்டேராடூனில் உள்ளது. இந்தப் பல்கலையில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு உள்நாட்டிலேயே அபரிமிதமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
மேலும் விபரங்களுக்கு www.upes.ac.in & www.upesindia.org
தமிழகத்தில் பெட்ரோலியம் சார்ந்த படிப்புகளை கற்றுத்தரும் இடங்கள்:
Dip in Petrochmical
in Tamilnadu
Annai J.K.K. Sampoorani Ammal Polytechnic College
Ethirmedu, Valayakaranur (P.O)
Thookkanaickenpalayam – 638 183
Namakkal
C.P.C.L. Polytechnic College
Manali, Chennai – 600 068
Erode Institute of Chemical Technology Polytechnic College
Uthukuli Road, Nadupatti Post
Vijayamangalam (Via)
Erode – 638 056
Konghu Velalar Polytechnic College
Kunnathur Road, Seenapuram
Perundurai-638 057
Erode
Nandha Polytechnic College
Erode
தமிழகத்தில் P.G. டிப்ளமோ பெட்ரோலியம் ரீஃபைனரி படிப்பு அண்ணாமலை பல்கலைக்
கழகம் சிதம்பரத்தில் கற்றுத் தரப்படுகிறது
இஸ்லாமிய வங்கியியல் :
அரபு நாடுகளுக்கு 5 ஆண்டுகளில் 30,000 பேர் தேவை!
வட்டி அடிப்படையிலான முதலாளித்துவ வங்கி இயல் நடைமுறைக்கு மாற்றாக 1965க்குப் பிறகு தொடங்கப்பட்ட வட்டியில்லா வங்கிஎன்றழைக்கப்படும் இஸ்லாமிய வங்கிகள் உலகம் முழுவதும் பெருகி வருகின்றன.
தற்போதைய பொருளாதார தேக்க நிலையில் உலகின் பெருவாரியான முதலாளித்துவ வங்கிகள் திவால் ஆகின. சேமிப்பை அடிப்படையாகக் கொண்ட இந்திய வங்கித் துறையும் வட்டியில்லா வங்கி இயல் வழிமுறைகளைக் கொண்ட இஸ்லாமிய வங்கிகளும் மட்டுமே தாக்குப்பிடித்து நின்றன.
குறிப்பாக இஸ்லாமிய வங்கிகள் பிற வங்கிகளைக் காட்டிலும் மிகப்பெரிய இலாபம் ஈட்டி பங்குதாரர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன. இதனால் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இஸ்லாமிய வங்கிகள் உருவாகி வருகின்றன. இதன் காரணமாக இஸ்லாமிய வங்கி இயல் படித்த பட்டதாரிகளுக்கு அரபு நாடுகளிலும் உலக அளவிலும் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 30,000 பேர் தேவை என்று வங்கி இயல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
10ஆம் வகுப்பு முடித்து வணிகவியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு முடித்து B.Com, B.A.Economics, BBA, BCA, BE-IT போன்ற நிதி மற்றும் தகவல் தொடர்பு சார்ந்து பட்டம் பெறும் மாணவ/மாணவியர் இஸ்லாமிய வங்கி இயல் படிப்பை பட்டயப்படிப்பாகவோ, பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பாகவோ கூடுதலாகப் படிக்க வேண்டும்.
இளங்கலை படிக்கும் போதே அரபுமொழி அறிவு அவசியம். இஸ்லாமிய வங்கி குறித்தான தகவல்களையும் இணையதளம் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. உயர்ந்த ஊதியம் மற்றும் குடும்ப விசாவோடு அரபு நாடுகளில் பணியாற்றுவதற்கு எளிய வழி இஸ்லாமிய வங்கி இயல் படிப்பது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கற்றுத் தரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்:
The Institute of Islamic Banking & Finance
Hyderabad  Phone +91-40-23520818
ALIGARH MUSLIM UNIVERSITY – www.amu.ac.in
Emirates Institute Of Banking & Financial Studies – Sharjah
www.eibfs.com
Durham University – London
MA and MSc in Islamic Finance – www.dur.ac.uk
Bahrain Institute of Banking and Finance
www.bibf.com
டெலிகாம் டெக்னாலஜி
Posted on admin on November 26, 2010 // Leave Your Comment
மத்திய அரசின் அடாமிக் எனர்ஜி துறையின் கீழ் செயல்படும் எலக்ட்ரனிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.,) நிறுவனம் டெலிகாம் டெக்னாலஜிஎன்ற ஆறு மாத புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. தற்போது டெலிகாம் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பினை கருத்தில் கொண்டு இப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் 23 ஆயிரம் ரூபாய். மேலும் விபரங்களுக்கு : 044-43322127
ஜமால் முகம்மது கல்லூரி வழங்கும் ஓராண்டு பட்டயப் படிப்புகள்…!
திருச்சி ஜமால் முகம்மது தன்னாட்சிக் கல்லூரி +2 மாணவர்கள் மற்றும் மதரஸாக்களில் படித்து

1 comment:

 1. First off I would like to say wonderful blog! I had a quick question which
  I'd like to ask if you do not mind. I was curious to know how you center yourself and clear your thoughts before writing.
  I've had a hard time clearing my thoughts in getting my ideas
  out. I truly do enjoy writing but it just seems like the first 10 to 15 minutes are lost just trying to figure out
  how to begin. Any recommendations or tips? Many thanks!


  Have a look at my blog post: Cheap Louis Vuitton

  ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.