புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மன்னவேலம்பட்டியை சேர்ந்த
அருண்குமார் என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில்
குளிக்க சென்றுள்ளான்.
குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, அருண்குமாரின் மூக்கில் ஜிலேபி மீன் ஒன்று நுழைந்தது.
இதனால் வலியால் அலறியடித்து துடித்த சிறுவனை, அவனது நண்பர்களும், பெற்றோரும் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு சிறுவனின் மூக்கில் இருந்து மருத்துவர்கள் மீனை உயிருடன் எடுத்தனர்.
No comments:
Post a Comment