
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து
வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று தரை இறங்கியது. அந்த விமானத்தில்
வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது, பயணி ஒருவர் கிரீன் சிக்னலை தாண்டி நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியை
மறித்து அவரது உடைமைகளில் சோதனை நடத்தினர்.
இதில்,
ஒரு சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 29 தங்கச்சங்கிலிகள், 30
பிரஸ்லெட்டுகள் போன்ற நகைகள் உள்பட 4 கிலோ எடையுள்ள தங்கம் இருந்ததை
அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்
அந்தேரி ஜே.பி.
ரோடு பகுதியை சேர்ந்த கவுரவ் திலிப் (வயது35) என்பது தெரியவந்தது.
No comments:
Post a Comment