
வாஷிங்டன்: 10 ஆயிரம் இந்தியர்கள் கைது... அமெரிக்காவில்
பாதுகாப்பு காரணங்களுக்காக 10 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக
அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து
அமெரிக்க குடிவரவு தணிக்கைத்துறை விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2015
முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தேச பாதுகாப்பு காரணங்களுக்காக
இந்தியர்கள் கைது செய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க
குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் 2015ல் 3,532 இந்தியர்கள்
கைது செய்யப்பட்டனர் என்றும், 2016ல் 3,913 பேரும், 2017ல் 5,322
பேரும்,2018ம் ஆண்டு 9,811 பேரும் கைது செய்யப்பட்டதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் 831 பேர் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment