
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது
செய்யப்பட்டு ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ
விசாரித்த வந்த இந்த வழக்கில் இருந்து கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி
ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது.

அதன்
பின்னர் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கிக் கொண்டார். கடந்த 4 ஆம் தேதி
அவருக்கு அமலாக்கத்துறையின் விசாரணையில் இருந்தும் ஜாமீன் கிடைத்தது.
அதன்
படி, 106 நாட்களாக திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரம் நிபந்தனை ஜாமீனில்
வெளியே வந்தார். வெளியே வந்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர்
சோனியா காந்தியைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, சிதம்பரம்
நாடாளுமன்றத்திற்கும் சென்றார்.
இந்நிலையில்,
நீண்ட நாட்கள் கழித்து ப.சிதம்பரம் சென்னை வந்தார். விமான நிலையத்தில்
அவரை கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, கார்த்தி சிதம்பரம் மற்றும் ஜோதி மணி
உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்குத் திரண்ட தொண்டர்கள் ப.சிதம்பரத்தின்
பதாகைகளை ஏந்திய படி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் கையில்
இருந்த பதாகையில், "மீண்டும் தர்மமே வென்றது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment