
புதுச்சேரி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து
காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில் டிசம்பர் 27ஆம் தேதி பொது
வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பேரணி
குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக,
இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தை கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்
ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பேசுகையில்,
"பிரதமர்
மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இது குறித்து மக்களே கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
அதைத் திசை திருப்பும் வகையில் குடியுரிமை சட்டத்
திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தில் இலங்கைத்
தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்துக்கு மதசார்பற்ற
கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம்.
இந்தியாவை
இந்து நாடாக்கும் முயற்சி நடக்கிறது. காஷ்மீர் விவகாரம், பாபர் மசூதி
விவகாரம், குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரம் உள்ளிட்டவை இதை
உறுதிப்படுத்துகின்றன. உத்தரப் பிரேதச மாநில போலீஸாரே மக்கள் மீது தாக்குல்
நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் சிலர் உயிர் இழந்துள்ளனர். சொந்த நாட்டில்
மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
குடியுரிமைச்
சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். ஆட்சியே
கவிழ்ந்தாலும் பரவாயில்லை. பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நீடித்து
வருகிறது. மத்திய அரசால் எத்தனை மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்த்துவிட
முடியும்.
அமைதிப் பூங்காவான இந்தியா கலவர பூமியாக
மாறியுள்ளது. பொது சிவில் சட்டத்தையும் விரைவில் அமல்படுத்தவுள்ளனர். எனவே,
குடியரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து புதுச்சேரியில் காங்கிரஸ் -
திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் டிசம்பர் 27 ஆம் தேதி மிகப்பெரிய பேரணி
நடத்த திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் கூட்டணி சார்பில் இதே
தினத்தில் போராட்டம் நடைபெறவுள்ளது" என்றார்.
இக்கூட்டத்தில்
புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், அமைச்சருமான ஆ.நமச்சிவாயம்,
வெ.வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் மு. கந்தசாமி, இரா. கமலக்கண்ணன்,
மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.பி., அரசுக் கொறடா ஆர்.கே.ஆர்.அனந்தராமன்,
புதுவை மாநில திமுக அமைப்பாளர்கள் இரா.சிவா எம்.எல்.ஏ. (புதுவை தெற்கு),
எஸ்.பி.சிவக்குமார் (புதுவை வடக்கு), இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர்
அ.மு.சலீம், துணைச்செயலர் வி.எஸ்.அபிஷேகம், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு
உறுப்பினர் பெருமாள், மதிமுக மாநில அமைப்பாளர் காபிரியேல்,
விடுதலைச்சிறுத்தைகள் முதன்மை செயலர் தேவ.பொழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment