
மத்திய அரசு சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை
நிறைவேற்றியதிலிருந்தே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல
இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அஸ்ஸாம் மாநிலத்தில் தொடங்கிய
போராட்டங்கள் மெல்ல மெல்ல இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவத்
தொடங்கின. மாணவ அமைப்புகள், எதிர்க்கட்சிகள் மிகத் தீவிரமான போராட்டங்களை
முன்னெடுத்து வருகின்றன.

இந்த
நிலையில் புதிதாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பிரதான
எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், அரசியல்வாதிகள் உச்ச நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்துள்ளனர்.
வீதிகளைக் கடந்து சட்டப்போராட்டத்தையும் எதிர்கொள்ள காத்திருக்கிறது மத்திய அரசும், புதிய குடியுரிமைச் சட்டமும்.
இந்த வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குடியுரிமை
சட்டத்தை அமல்படுத்த தடைவிதிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்
என நோட்டீஸ் அனுப்பி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
``ரஜினியைப் பார்த்தா இதை மட்டும் கண்டிப்பா சொல்லணும்!" - ரெயின்போ ஆர்.ஜே அருள்செல்வி
இந்த
வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அஸ்ஸாம் முதல்வருமான தருண்
கோகோயும் வழக்கறிஞராக ஆஜராகியிருக்கிறார். மூன்று முறை அஸ்ஸாம் முதல்வராக
இருந்துள்ள தருண் கோகோய் சட்டம் பயின்றவர். கடைசியாக 1983-ம் ஆண்டு தருண்
கோகோய் வழக்கறிஞர் பணி செய்திருக்கிறார்.
No comments:
Post a Comment