
தேனி: தேனி மாவட்டம், போடியில் நறுமனப்
பொருள் வாரியம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில்
ஏலக்காய் விலை சீராக உயர்ந்து சராசரி தரம் கிலோ ஒன்று ரூ.3,517.15-க்கு
விற்பனையானது.
கேரளம், இடுக்கி மாவட்டத்தில் விளையும்
ஏலக்காய் கேரளத்தில் குமுளி அருகே புத்தடியிலும், தேனி மாவட்டம்,
போடியிலும் நறுமனப் பொருள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் தனியார் ஏல விற்பனை
நிறுவனங்கள் சார்பில் மின்னணு ஏல வர்த்தகம் மூலம் விற்பனை
செய்யப்படுகிறது.
இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018்-ல் நிலவிய வறட்சியால் தற்போது ஏலக்காய் தோட்டங்களில் மகசூல் குறைந்துள்ளது.
சந்தைக்கு ஏலக்காய் வரத்து குறைந்துள்ளதால், விலை சீராக உயர்ந்து வருகிறது.
போடியில்
நடைபெற்ற ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தில் ஏலக்காய் சராசரி தரம் கிலோ
ஒன்று ரூ.3,517-க்கும், உயர் தரம் கிலோ ரூ.3,919-க்கும் விற்பனையானது.
ஏலக்காய் தோட்டங்களில் வரும் 2020், ஜூன் மாதத்திற்கு பின்பு தான் மகசூல்
சீராக வாய்ப்பு உள்ளது என்பதால், விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது
என்று வியாபாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment