
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் 400 மொழிகளில் பேசக்கூடிய திறமை பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு
மனிதன் 3 அல்லது 4 மொழி பேசுவதே கடினமாக இருக்கும் நிலையில் மஹ்மூத்
அக்ரம் என்ற 13 வயது சிறுவன் 400 மொழிகளில் எழுதவும், படிக்கவும், தட்டச்சு
அடிக்கவும் செய்கிறான். அசாத்திய திறமைகொண்ட அக்ரனுக்கு மேலை நாடுகள் பல
குடியுரிமை தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அக்ரமின் பெற்றோர்கள்
இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என அந்த வாய்ப்புகளை
நிராகரித்துவருகின்றனர்.
பல பள்ளிகளில்
மோட்டிவேஷ்னல் ஸ்பீக்கராக வலம்வரும் அக்ரம், world youngest multilanguage
விருது, ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியின் கேகன் கோர்ஸ் நிகழ்ச்சியின்
டைட்டில் உள்ளிட்ட பல பட்டங்களை தன்வசப்படுத்தியிருக்கிறார்.
இவரது அசாத்திய திறமையை அறிந்த ஆஸ்திரியாவிலுள்ள சர்வதேச
பள்ளி ஒன்று, அங்கு இலவசமாக படிக்க அழைத்தது. ஆனால் அவரது பெற்றோர்
வெளிநாடுகள் வழங்கிய அனைத்து வாய்ப்புகளை தட்டிகழித்துவிட்டனர்.
No comments:
Post a Comment