
கான்பூர்: பிரதமர் நரேந்திர மோடி எப்போதுமே வேகமாக நடக்கும் பழக்கம்
கொண்டவர். படு சுறுசுறுப்பானவர். ஆனால் இன்று படிக்கட்டில் நிலை தடுமாறி
கீழே விழுந்து விட்டார்.
நாட்டின் புனித நதிகளில் ஒன்றாக
கருதப்படும் கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு
வருகிறது. இதற்காக தேசிய கங்கை நதி கவுன்சில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்
ஆலோசனைக் கூட்டம் இன்று கான்பூரில் நடந்தது.
இதில்
கலந்து கொள்வதற்காக கான்பூர் வந்திருந்தார் பிரதமர் மோடி. அவருடன் உ.பி.
முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்
கூட்டத்தில் கங்கையை சுத்தப்படுத்தும் பணி எந்த அளவுக்கு உள்ளது என்பது
குறித்து ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.
அதன் பின்னர் கங்கை நதியை சுத்தப்படுத்தும்
பணியைப் பார்வையிடுவதற்காக மோடி உள்ளிட்டோர் சென்றனர். அப்போது கங்கை நதிக்
கரைக்கு செல்வதற்காக படிகளில் வேகமாக ஏறி நடந்தார் பிரதமர் மோடி. மேல்
படியை எட்டியபோது அவர் கால் தடுமாறி இடறி கீழே விழுந்து விட்டார்.
இதைப்
பார்த்து அனைவரும் பதறிப் போனார்கள். உடனடியாக பிரதமரின்
மெய்க்காப்பாளர்கள் பிரதமரை தூக்கி விட்டனர். நல்ல வேளையாக பிரதமருக்கு
பெரிதாக அடி படவில்லை. இந்த சம்பவம் அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தி
விட்டது.
source: oneindia.com
No comments:
Post a Comment