Latest News

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின

பிலிப்பைன்ஸ்: சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... பிலிப்பைன்சின் டாவோ நகர் அருகே 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் மையமானது அந்நகரிலிருந்து தென்மேற்கு பகுதியில் 61 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மிண்டானோ தீவில், 28.2 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவாகியிருந்தது.

நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் இருந்து நீர் அலைபோல் எழுந்தது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.