நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால்
வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் நீடித்து வன்முறை வெடித்து வருகிறது. நாடாளுமன்றத்தில்
நிறைவேறியுள்ள குடியுரிமை திருத்த மசோதா என்பது பாகிஸ்தான், வங்கதேசம்
மற்றும் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினர்களாக இருக்க கூடிய இந்துக்கள்,
பார்சிக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியாவில்
குடியுரிமை கொடுக்க வகை செய்யும் மசோதா ஆகும்.
தற்போது
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு
அகதிகளாக வரக்கூடிய இந்துக்கள் அவ்வளவு எளிதாக இந்தியாவின் குடியுரிமையை
பெற்றுவிட முடியாது. ஆனால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள சட்டதிருத்தம்
மூலம் அந்நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் அகதிகளாக வந்த 6 வருடத்தில்
மேலே கூறிய மதங்களை சேர்ந்தவர்கள் இந்திய குடியுரிமை பெற்றுவிட முடியும்.
இதன்
மூலம் தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து
இந்தியாவில் அகதியாக தஞ்சம் அடைந்த இந்துக்கள் 25,447 பேரும், சீக்கியர்கள்
5,807 பேரும், கிறிஸ்தவர்கள் 55 பேரும் இந்திய குடியுரிமை பெறத்
தகுதியானவர்கள். ஆனால் எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில்
அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
பெரும்பாலும் வங்கதேசத்தில் இருந்து
இந்துக்கள் அகதிகளாக வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் திரிபுராவிற்குள்
வர வாய்ப்பு உள்ளது. இதே போல் நாகலாந்து, மணிப்பூரிலும் கூட வங்கதேச இந்து
அகதிகள் வந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய குடியுரிமை பெற்றுவிட
முடியும். அதாவது வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் 6 வருடங்கள்
இந்தியாவில் இருந்தால் இந்தியர்கள் ஆகிவிடலாம்.
இவ்வாறு
இந்தியா குடியுரிமை கொடுப்பது தெரிந்தால் அங்கு சிறுபான்மையினர் என
கருதப்படும் இந்துக்கள் அசாம், நாகலாந்து, மணிப்பூர், திரிபுரா
மாநிலங்களுக்குள் அதிகம் தஞ்சம் கேட்டு வரவலாம். 6 வருடங்களுக்கு பிறகு
குடியுரிமை பெற்று இங்கு பூர்வகுடிகளாக உள்ள மக்கள் அடையும் அனைத்து
பலன்களையும் பெற முடியும்.
இதனால் இந்தியாவின் பூர்வகுடிகளான
தங்களுக்கு வாய்ப்புகள் பறிபோகும், நிலங்கள் பறிபோகும் என்று வடகிழக்கு
மாநிலத்தவர்கள் அஞ்சுகின்றனர். இதன் எதிரொலியாகவே அசாம், நாகலாந்து மற்றும்
திரிபுராவில் வன்முறை வெடித்துள்ளது. குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப
பெற வலியுறுத்தி கலவரங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment