
குடியுரிமை சட்டதிருத்த மசோதா, காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு
நீக்கம், விவசாயிகள் பிரச்னை, உள்ளிட்டவற்றை கண்டித்து "இந்தியாவை
காப்பாற்றுங்கள்" என்ற பெயரில் பிரமாண்ட பேரணியை காங்கிரஸ் கட்சியை
நடத்தியது. இந்தப்பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன்
சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். எராளமான
காங்கிரஸ் தொண்டர்கள் ராம்லீலா மைதானத்தில் குவிந்திருந்தனர்.

பிரியங்கா காந்தி பேசுகையில், ``நாட்டை நேசிப்பதாக இருந்தால் உங்கள் குரலை உயர்த்த வேண்டும்.
நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராகப் போராடாதவர்கள்
கோழைகளாக கருதப்படுவார்கள். நாம் அமைதியாக இருந்துவிட்டால் புரட்சிகரமான
நமது அரசியலமைப்பு சட்டம் அழிக்கப்பட்டு நாட்டில் பிரிவினை தொடங்கி விடும்"
என ஆவேசமாகப் பேசினார்.
``6
வருடங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, மக்களிடம் உயர்ந்த
வாக்குறுதிகளை அளித்தார். அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்து பொய்யானவை என
தற்போது நிரூபணமாகியுள்ளது. மோடி, தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்
தவறிவிட்டார். பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களைத் தவறாக
வழிநடத்தியுள்ளார். சோனியா மற்றும் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ்
கட்சியை மக்கள் வலுப்படுத்த வேண்டும். காங்கிரசுக்கு மக்கள் அதிகாரத்தை
அளிக்க வேண்டும்" என்று மன்மோகன் சிங் பேசினார்.
சோனியா
காந்தி பேசுகையில் , ``மோடி, அமித் ஷா தலைமையிலான அரசு,
நாடாளுமன்றத்தையும், ஜனநாயக ரீதியிலான இதர அமைப்புகளையும் மதிப்பதில்லை.
குடியுரிமை மசோதா, இந்தியாவின் ஆன்மாவை சிதைக்கும் என்பது குறித்து மோடி,
அமித் ஷாவுக்கு கவலையில்லை. வடகிழக்கு மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை
நாம் பார்க்கிறோம். குழப்பமான, பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மை
நிலவரங்களை மறைத்துவிட்டு, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது தான்
இவர்களின் நோக்கம். நாட்டைக் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இதற்காக நாம் கடினமாக போராட வேண்டும்" என்று பேசி முடித்தார்.
Dailyhunt
No comments:
Post a Comment