
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆண்டு நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தற்போது நிறைவேற்றியுள்ளது.
இந்த
மசோதாவிற்கு நாட்டு மக்களிடயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையமும் தனது
கண்டனத்தை பதிவு செய்து அறிக்கை வெளிட்டுள்ளது.
அந்த
அறிக்கையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மூலம் தவறான திருப்பத்தில்
ஆபத்தான திசையில் இந்தியா திரும்புகிறது எனவும், மதச் சோதனை நடத்தும் அந்த
மசோதவைக் கொண்டுவந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்கள்
மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு பாகிஸ்தான் பிரதமர்
இம்ரான் கான் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும், பாகிஸ்தான்
பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பதிவில் பாசிச மோடி அரசு எனக்
கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர்
பதிவில், "இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்ட
மசோதாவுக்கு எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம். மேலும், இந்த மசோதா மனித
உரிமை சட்டத்தை மீறும் வகையிலும், பாகிஸ்தானுடனான இரு தரப்பு ஒப்பந்தத்தை
மீறும் வகையிலும் உள்ளது.
இந்த மசோதா மூலம் பாசிச மோடி அரசு
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் 'இந்து ராஷ்டிர' கொள்கையை விரிவுபடுத்த
முயற்சிக்கிறது" எனக் கடுமையாக சாடியுள்ளார்.
No comments:
Post a Comment