
லக்னோ: டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக கலவரத்தை தொடங்கி
தற்போது உத்தர பிரதேச மாநில அலிகார் பல்கலைக்கழகத்திலும் தீவிர போராட்டம்
நடந்து வருகிறது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு
முழுக்க கலவரமும் போராட்டமும் வெடித்து இருக்கிறது. டெல்லியில் போராட்டம்
விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜாமியா
மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 4
நாட்களாக இந்த போராட்டம் நடந்து வருகிறது.
இன்று
நடந்த போராட்டத்தில் மூன்று பேருந்துகள் மர்ம நபர்களால் தீ வைத்து
கொளுத்திவிடப்பட்டது. இதையடுத்து அங்கு மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்
நடத்தினார்கள்.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் ஜாமியா மிலியா
பல்கலைக் கழக கலவரத்தை தொடங்கி தற்போது உத்தர பிரதேச மாநில அலிகார்
பல்கலைக்கழகத்திலும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. அங்கு மாணவர்கள்
மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இன்னொரு
பக்கம் போலீசாரை மாணவர்களை தாக்கினார்கள் என்றும் உத்தர பிரதேச போலீஸ்
தரப்பு தெரிவித்துள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் இன்று இரவு நுழைந்த
போலீசார் அங்கிருந்த மாண்வர்களாய் அடித்து உதைத்து, லத்தி மூலம்
காயப்படுத்தினார்கள்.
இது தொடர்பாக வீடியோக்கள் பல இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனால் இந்த போராட்டம் உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
No comments:
Post a Comment