பொள்ளாச்சி: வழக்கை வாபஸ் வாங்க மறுத்த
மாமியாரை கடித்து குதறிய மருமகளை போலீசார் கைது செய்து, சிறையில்
அைடத்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள மின்நகரை சேர்ந்தவர்
நாகேஸ்வரி (62), பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார். இவரும், இவரது
மனைவி கல்பனாவும் (42) சின்னாம்பாளையத்தில் வசித்து வருகின்றனர்.
மாமியாருக்கும், மருமகளுக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட
தகராறில், மருமகள் மீது, மாமியார் நாகேஸ்வரி பொள்ளாச்சி கிழக்கு போலீசில்
புகார் செய்தார். போலீசார், மருமகள் கல்பனா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.இந்நிலையில்
கல்பனா, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மின்நகரில் வசித்து வரும் மாமியார்
நாகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று, தன் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க
வேண்டும் எனக்கூறி தகராறில் ஈடுபட்டார்.
மாமியார், வழக்கை வாபஸ் வாங்க மறுத்ததால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கல்பனா, நாகேஸ்வரி தலையின் ஒரு பகுதியை கடித்து குதறினார். இதில் படுகாயம் அைடந்த நாகேஸ்வரி, ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் இருந்து வெளியேறினார். அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு, அவருக்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.இதுகுறித்து நாகேஸ்வரி, மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்பனாவை கைது செய்து, ஜே.எம்.-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, கல்பனாவை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:
Post a Comment