புதுடில்லி: டில்லியில் ஓடும் ப்சில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து
கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை தூக்கில் போட திஹார் சிறையில்
ஊழியர்கள் இல்லை. இதனால், சிறை அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். டில்லியில்,
2012ம் ஆண்டில், , ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி ஒருவரை, ஆறு பேர்
அடங்கிய கும்பல், கொடூரமாக பலாத்காரம் செய்தது. இதன் பின், அந்த மாணவி,
சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர்
இறந்தார்.இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, ராம்சிங், முகேஷ் சிங், வினய்
சர்மா, பவன் குப்தா, அக் ஷய் தாக்குர் ஆகிய ஐந்து பேரையும், 16 வயது
சிறுவன் ஒருவனையும், டில்லி போலீசார் கைது செய்தனர். இவர்களில் ராம்சிங்,
திகார் சிறையில், 2013-ல், தற்கொலை செய்து கொண்டார்.
சிறுவனுக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கி, சிறார்
நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மற்ற நான்கு பேருக்கும், 2013, செப்டம்பரில்,
விரைவு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது, இந்த தீர்ப்பை, டில்லி உயர்
நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், உறுதி செய்தன.இவர்கள் தூக்கு
தண்டனையிலிருந்து தப்பிக்க, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் வாய்ப்பு
மட்டுமே குற்றவாளிகளிகளுக்கு உள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. தண்டனையை
குறைக்கக்கோரி, 4 பேரும் தாக்கல் செய்த மனுவை, டில்லி கவர்னர் அனில்
பைஜால் தள்ளுபடி செய்தார். மேலும், கோர்ட் உத்தரவுப்படி4 பேரையும் தூக்கில்
போடவும் பரிந்துரை செய்தார். 4 பேரின் கருணை மனு மத்திய உள்துறை
அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.விரைவில், இந்த மனுக்கள் மீதான
ஆய்வு முடிந்து, கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தூக்கு தண்டனையை
நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், குற்றவாளிகள், எந்த நேரத்திலும் தூக்கில் போடப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. ஆனால், திஹார் சிறையில் குற்றவாளிகளை தூக்கில் போட ஊழியர் இல்லை என திஹார் சிறை அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். இங்கு குற்றவாளிகளை தூக்கில் போட நிரந்தர ஊழியர் கிடையாது. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment