
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு
தெரிவித்து அஸ்ஸாமில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள்
இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
குடியுரிமை
சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், திரிபுரா,
மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களான போராட்டம்
தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், திரிபுரா, அஸ்ஸாம், மேகாலயா ஆகிய
மாநிலங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. குவாஹாட்டியில் ரயில் சேவை,
விமான சேவை உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு
வர குவாஹாட்டியில் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அஸ்ஸாமில் போராட்டத்தில்
ஈடுபட்ட போராட்டக்காரர்களுள் இருவர் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் குண்டடிபட்ட காயத்தில் உயிரிழந்திருப்பதாக பிடிஐ செய்தி
நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை அதிகாரிகள்
தெரிவித்திருப்பதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
https://m.dailyhunt.in
No comments:
Post a Comment