
உள்ளாட்சித்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ்
கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் முயற்சியால் மாநில தலைமை மீது
அதிருப்தி ஏற்படுகிறது என, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர்.
தமிழகளவில்
காங்கிரஸ் கட்சியில் 72 மாவட்ட தலைவர்கள் செயல்படுகின்றனர். இவர்களில் 20
பேரை மாற்றுவது தொடர்பாக கட்சியின் மாநில தலைவர் கேஎஸ்.அழகிரி நடவடிக்கை
எடுத்தார்.
இதற்கான பட்டியல் ஒன்றும்
தயாரிக்கப்பட்டது. இப்பட்டியலை அகில இந்திய கட்சி தலைமையில் ஒப்புதல்
பெற்று, புதிய நிர்வாகிகளை நியமிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். இதில்
சில குளறுபடி இருப்பதாக கூறி, புகார் எழுந்தது. தற்போதைக்கு வேண்டாம்.
பிறகு பார்க்கலாம் என, கட்சித் தலைமை கூறியதால்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என, கட்சியினர் தரப்பில்
கூறப்படுகிறது.
இருப்பினும், பெரும்பாலும் தேர்தல் நேரத்தில்
நிர்வாகிகள், கட்சியின் தலைமையை மாற்றுவதால் தேர்தல் பணிகள் பாதிக்கும் என,
நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
நிர்வாகிகள்
சிலர் கூறியது: கடந்த 15 ஆண்டுக்கு மேலாக மாநிலத் தலைவர் தவிர, பிற மாநில
நிர்வாகிகளில் மாற்றம் என்பது பெரியளவில் இல்லை. ஏற்கனவே தலைவர்களாக
இருந்தவர் கள், அவர்களுக்கு ஆதரவான சிலரை அவ்வப் போது அகில இந்திய
கமிட்டியிடம் ஒப்புதல் பெற்று நியமனம் செய்தனர். இந்நிலையே தற்போதும்
நீடிக்கிறது.
மாநில தலைவரான கே.எஸ் அழகிரி 20 மாவட்ட தலைவர்களை
மாற்றும் முயற்சியில் புதிதாக பட்டியல் தயாரித்து, அகில இந்திய கமிட்டிக்கு
ஒப்புதல் பெற முயன்றார். அவரது ஆதரவாளர்களே பட்டியலில் அதிகமானோர் இடம்
பெற்றிருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. அனைத்து மாவட்ட தலைவர்களிடமும்
ஆலோசித்த பிறகு புதிய நிர்வாகிகள் நியமனம்பற்றி முடிவெடுக்கலாம் என டெல்லி
தலைமை கூறியதால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது.
ஒவ்வொரு
காலகட்டத்திலும் மாநில தலைவராக நியமிக்கப்படுவோர் தங்களுக்கு
வேண்டியவர்களுக்கு மாநில, மாவட்ட பதவிகள் பெற்று தருக்கின்றனர். நீண்ட
நாளாக கட்சியில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது.
பெரும்பாலும், தேர்தல் நேரத்தில் நிர்வாகிகள் மாற்றம் என்பது இக்கட்சியில்
அடிக்கடி நடக்கிறது.
மக்களவை தேர்தலின்போது, மாநில நிர்வாகி
திருநாவுக்கரசர் மாற்றப்பட்டார். இதே போன்று உள்ளாட்சித் ர்தல் சமயத்தில்
தற் போதைய தலைவர் புதிதாக 20 நிர்வாகிகளை நியமிக்க முயற்சிக்கிறார். இது
போன்ற செயலால் கீழ்நிலையிலுள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் பாதிக்கிறோம்.
உள்ளாட்சித்
தேர்தலிலும் போட்டியிடுவோருக்கு முழு ஒத்துழைப்பு கிடைப் பது சிரமம்.
இந்நேரத்தில் புதிய நிர்வாகிகள் மாற்றம் தவிர்க்கவேண்டும். மாநில அளவில்
தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்க வேண் டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment