
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை
செய்யப்பட்டதோடு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும்
பெரும் அதிர்வலைங்களை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக நான்கு பேர்
கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் நான்கு
குற்றவாளிகளிடமும் நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர விசாரணை
செய்தபிறகு இன்று காலை பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு
குற்றவாளிகளை அழைத்து சென்றபோது அவர்கள் தப்ப முயன்றதால் போலீசார் அவர்களை
என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.

போலீசாரின் இந்த அதிரடி முடிவிற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவர் கொலை செய்யப்பட்டதுபோல எனது
மகளும் அரசியல்வாதி ஒருவரால் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை
செய்யப்பட்டதாகவும், அவரையும் இதுபோன்று சுட்டுக்கொள்ளுங்கள் என
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சீமா சிங்க் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியர்கள் அம்மாநிலத்தின் முதல்வரான
யோகி ஆதித்தாயவுக்கு அழுத்தம் கொடுங்கள், உத்திரபிரதேச பொலிசார் அவரை
என்கவுண்டர் செய்யுங்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் அந்த பெண்.
No comments:
Post a Comment