
புது தில்லி: தேசத்தின் ஆன்மாவான இளைய
தலைமுறை மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது என்று காங்கிரஸ்
பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை
சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று
வருகிறது. ஞாயிறன்று தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக
மாணவா்கள் நடத்திய போராட்டத்தின் போது, மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதை
கண்டித்து திங்களன்று லக்னோ, மும்பை, ஹைதராபாத், பாட்னா உள்ளிட்ட
நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அதுபோல
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தில்லி இந்தியா
கேட் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவருடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சிலரும்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு
எதிராகவும், தில்லி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதை கண்டித்தும்
பிரியங்கா இந்த தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில்
தேசத்தின் ஆன்மாவான இளையதலைமுறை மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது
என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம்
தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி கூறியதாவது:
தேசத்தின்
ஆன்மாவான இளையதலைமுறை மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது.
மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் தடியடி
நடத்தியது ஏன்? தங்களின் உரிமைகளுக்காக போராடுவோரை வெளியே இழுத்து வந்து
தாக்கியது கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் கொடுங்கோன்மைக்கு எதிராகவும்,
மாணவர்களுக்கு உறுதுணையாகவும் நிற்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Dailyhunt
No comments:
Post a Comment