
குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம்
நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையிலும் போராட்டம்
நடைபெற்று வரும் நிலையில், திமுக சார்பில் நாளை பேரணி நடத்த ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற
வலியுறுத்தி தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாளை,
ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த
போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வாராகி
மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், முறையான அனுமதியின்றி போராட்டம் நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாணவர்கள் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு
பாதித்துள்ள நிலையில், தற்போது போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது எனவும்,
குடியுரிமை சட்டத் திருத்தத்தை புரிந்து கொள்ளாமல் இந்த போராட்டத்தை நடத்த
இருப்பதாகவும், டில்லி, உத்தரபிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் நடந்த
போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது போல, தமிழகத்தில் நடக்காமல் தடுக்க
வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பாதிப்பை
ஏற்படுத்தும் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழக
அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட வேண்டும் எனவும், போராட்டத்திற்கு
தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மனுவில் உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் எதிர்மனுதாரர்களாக
சேர்க்கப்பட்டனர்.
இந்த மனுவை விசாரித்த எஸ்.வைத்தியநாதன் அமர்வு நீதிபதிகள், திமுக பேரணிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment