புதுடில்லி: ஜார்க்கண்டில் நடந்த கூட்டத்தில், எங்கு பார்த்தாலும், ''
ரேப் இன் இந்தியா'' என மாறி வருவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதற்கு
எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., பெண் எம்.பி.,க்கள் லோக்சபாவில் அமளியில்
ஈடுபட்டனர். இதனால், அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.ஜார்க்கண்டில்
நடந்த கூட்டம் ஒன்றில், ராகுல் பேசும் போது, 'மேக் இன் இந்தியா' குறித்து
மோடி பேசி வருகிறார். ஆனால், எங்கு பார்த்தாலும், ' ரேப் இன் இந்தியா' ஆக
உள்ளது.உ.பி.,யில் பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர் பெண்ணை பலாத்காரம் செய்தார்.
ஆனால், அது குறித்து மோடி பேசுவது கிடையாது என தெரிவித்திருந்தார்.ராகுலின்
இந்த பேச்சுக்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
லோக்சபா இன்று(டிச.,13) கூடியதும், பா.ஜ., பெண்
எம்.பி.,க்கள் ராகுலுக்கு எதிராக கோஷம் போட்டு அமளியில்
ஈடுபட்டனர்.அப்போது, பேசிய ஸ்மிருதி இரானி, வரலாற்றில் முதல்முறையாக,
தலைவர் ஒருவர், பெண்கள் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
இது தான் நாட்டு மக்களுக்கு ராகுல் சொல்லும் செய்தியா? அவரை தண்டிக்க
வேண்டும். அனைத்து ஆண்களும், பலாத்காரம் செய்பவர்கள் இல்லை.
ராகுலின் பேச்சு இந்தியாவுக்கு அவமானம். அவருக்கு 50 வயதாக போகிறது. அவரின் இந்த கருத்தை பலாத்காரத்தை ஊக்குவிப்பது போல் உள்ளது என்பது அவருக்கு தெரியவில்லை என்றார்.பார்லி விவகாரத்துறை அமைச்சர் பிரலஹாத் ஜோஷி கூறுகையில், ராகுல், அவரது பேச்சின் மூலம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் அவமானப்படுத்தியுள்ளார் என்றார். தொடர்ந்து பா.ஜ., பெண் எம்.பி.,க்கள் ராகுலுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால், அவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.அமளிகளுக்கு இடையே திமுக எம்.பி., கனிமொழி பேசும் போது, '' மேக் இன் இந்தியா'' என்ற பிரதமரின் கருத்தை நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது? இதனை தான் ராகுல் கூறியுள்ளார். ஆனால், மேக் இன் இந்தியா வரவில்லை. நாட்டில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
இது கவலைக்குரிய விஷயம். இவ்வாறு அவர் பேசினார். ராஜ்யசபா இதே போல், ராஜ்யசபாவில் பா.ஜ., எம்.பி.,க்கள் ராகுலுக்கு எதிராக கோஷம் போட்டனர். அப்போது வெங்கையா நாயுடு கூறுகையில்; இந்த அவையில் உறுப்பினராக இல்லாத ஒருவரின் பெயரை, அவையில் உச்சரிக்கக்கூடாது. அவையின் பணிகளை யாரும் தடுக்கக்கடாது என்றார்.இன்றைய கூட்டத்தில் அமளி முடிந்ததும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:
Post a Comment