
கர்நாடகத்தில்
குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி
அரசுக்கு எதிராக செயல்பட்டதாலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக
கூறி 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக
சட்டசபையில் 17 இடங்கள் காலியாக இருந்தன. 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு
கடந்த 5ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது.
இந்த இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி
நடைபெற்றது. இதில், பா.ஜ.க. 10 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்து
கொண்டது. இரண்டு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையிலும் உள்ளது.
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக பதவி வகித்த முன்னாள் முதல் மந்திரியான
சித்தராமையா கூறியது , சட்டமன்ற குழு தலைவராக, ஜனநாயகத்திற்கு மரியாதை
அளிக்க வேண்டிய தேவை எனக்கு உள்ளது என கூறினார்.
காங்கிரஸ் சட்டமன்ற
குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா விலகினார். அவரது பதவி விலகல்
கடிதம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. கர்நாடக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில்
இருந்தும் அவர் விலகியுள்ளார்.
No comments:
Post a Comment