
சென்னை மதுரவாயலில் வாகனச் சோதனையில் ஈடுபடும் காவல் துறையினர்
கேஸ்லெஸ் அபராத முறையில் முறைகேட்டியில் ஈடுபடுவதாக தென்னிந்திய மோட்டார்
டிரான்ஸ்போர்ட் உறுப்பினர் கணேஷ்குமார் ஆதாரத்துடன் குற்றம்
சாட்டியிருந்தார். சென்னைக்குள் நுழையும் பெரும்பாலான லாரியை மறைத்து லாரி
ஓட்டுநர்களிடம் ரூ.100 அபராதம் விதித்து, ரூ.200 பெற்றுக்கொண்டு பணம்
செலுத்தவில்லை என்று பெண்டிங் ரசீது கொடுத்து முறைக்கேட்டில் ஈடுபட்டு
வருவதாக புகார் எழுந்துள்ளது.

காவல்
ஆணையரின் விசாரணைக்கு பயந்து மதுரவாயல் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மற்றும் உதவி ஆய்வாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர் விடுப்பில் சென்றுவிட்டதாக
கூறப்படுகிறது.
அதே நேரத்தில் முறைகேடான வசூல் விவகாரத்தை
வெளிச்சத்திற்கு கொண்டுவந்த கணேஷ்குமார் மற்றும் ஓட்டுனரிடம் சென்னை
காவலானையர் அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறி காவல் துறையினர் விசாரணை
நடத்தியுள்ளனர். இது போன்று சென்னையில் எங்கெல்லாம் முறைகேடு நடைபெறுகிறது
என்ற பட்டியலை தென்னிந்திய மோட்டர் டிரான்ஸ்போர்ட் கூட்டமைப்பு நிர்வாகிகள்
காவல்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
No comments:
Post a Comment