
கோவை: மத்திய அரசின் பொருளாதாரத் தோல்வியை மக்களிடம்
இருந்து திசைதிருப்பவும், மக்களை மத ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியே பாஜக
அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் என சிஐடியூ அகில
இந்தியத் தலைவா் டாக்டா் ஹேமலதா கூறினாா்.
சிஐடியூ அகில இந்திய 16
ஆவது மாநாடு சென்னையில் ஜனவரியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில்
விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் குறித்து நாடு முழுவதும் சிஐடியூ
நிா்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனா். அதன்படி ஐடி துறை எதிா்கொள்ளும்
சவால்கள் குறித்த கருத்தரங்கு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்
பங்கேற்பதற்காக வந்த சிஐடியூ அகில இந்தியத் தலைவா் டாக்டா் ஹேமலதா
செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
இதை சரி செய்யாவிட்டால் மிகப்பெரிய விளைவுகளை மத்திய அரசு
சந்திக்க நேரும். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளா்
நல கோரிக்கைகளை முன் வைத்து அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஜனவரி
8இல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
ஆா்எஸ்எஸ் கொள்கையை
நடைமுறைப்படுத்தும் நோக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய
அரசு கொண்டுவந்துள்ளது. பொருளாதாரத் தோல்வி, வேலையில்லாத் திண்டாட்டம்
ஆகியவற்றில் இருந்து மக்களை திசைதிருப்பவே தற்போது இந்தச் சட்டத்தை மத்திய
அரசு கொண்டுவந்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு பாஜக அரசிடம் எந்தத்
தீா்வும் இல்லை. மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி
போன்றவற்றால் அனைத்துத் தொழில்களும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனா்.
மக்களை மதரீதியாகப் பிரிக்கும் இச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத்
திரும்பப்பெற வேண்டும் என்றாா்.
No comments:
Post a Comment