Latest News

கால்பந்து போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வெஸ்டர்ன் FC அணி!

கால்பந்து தொடர் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்று  வெஸ்டர் FC கால்பந்து அணி விளையாட்டு வீரர்கள் மேலும் பல பதக்கங்கள் வென்று சாதனை படைக்க வேண்டுமென்று  விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் TIYA வின்  நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதில், அதிராம்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு உள்ளிட்ட மொத்தம் 23 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC, தஞ்சாவூர் ஜி புட்பால் கிளப் ஆகிய அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்று விளையாடின. இதில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC அணியில், அன்சார் கான் (கோல் கீப்பர்), ஆதில் (கேப்டன்), அன்சார் கான், ரிஸ்வான், சதாஸ் கான், நவீத், ரியாவூதீன், நிஷாருதீன், அஃப்ரித்கான், முகமது ஆகிய வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.

விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில், 2-0 என்ற கோல் கணக்கில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC அணி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றது. அணியின் நட்சத்திர வீரர்கள் சதஸ்கான், நிசார் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு, சுழற்கோப்பை வழங்கப்பட்டன. மேலும், தொடர் போட்டியில் சிறந்த கோல் கீப்பருக்கான சிறப்புப் பரிசு மற்றும் கேடயப்பரிசினை அணியின் வீரர் அன்சர்கான் பெற்றார்.

சிறந்த கோல் கீப்பருக்கான பரிசு அன்சர்கான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


என்று அன்புடன்
TIYA அமீரகம், அதிரைசிறந்த கோல் கீப்பருக்கான பரிசு பெற்ற அன்சர்கான் 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.