Latest News

தலையில் குல்லா.. முகமூடியுடன்.. பள்ளிவாசலுக்குள் புகுந்து ஓடிய இருவர்.. வில்சனை சுட்டது இவர்கள்தானா?

கன்னியாகுமரி: யார் இவர்கள்.. தலையில் குல்லாவுடன் பள்ளி வாசலுக்குள் நுழைகிறார்கள்.. முகத்தில் இருந்த முகமூடியை கழட்டியபடியே இந்த பள்ளி வாசல் வழியாக தப்பித்தும் செல்கிறார்கள்.. எஸ்ஐ வில்சனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற இவர்கள் பள்ளிவாசல் வழியாக தப்பி ஓடும் இந்த சிசிடிவி காட்சி காண்போரை நடுநடுங்க வைத்துள்ளது!

கன்னியாகுமரி கேரள எல்லையில் உள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்ஐ வில்சன் என்பவர் நேற்றிரவு பணியில் இருந்தார். இவருக்கு வயது 58 ஆகிறது.. அந்த பக்கமாக வந்து கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தபோது, கன்னியாகுமரி நோக்கி ஸ்கார்பியோ கார் ஒன்று வந்தது.

வில்சன் அந்த வண்டியை நிறுத்தி சோதனை செய்தார்.. சோதனை செய்து கொண்டிருந்தபோதே திடீரென அதில் உட்கார்ந்திருந்த 2 பேர் வில்சனை துப்பாக்கியால் 4 முறை சுட்டனர்.. மார்பு, வயிறு, தொடையில் குண்டுப்பாய்ந்த வில்சன் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார்.


துப்பாக்கி சத்தம்
வில்சன்
துப்பாக்கி சத்தம் கேட்டு சக பணியாளர்கள் ஓடிவந்தனர்.. அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர்... இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய வில்சனை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தும் வில்சன் பரிதாபமாக உயிரிழந்தார். எஸ்ஐ-யை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கும் அளவுக்கு அவர்கள் அந்த ஸ்கார்பியோ காரில் எதை வைத்திருந்தார்கள்? வில்சன் காரில் என்ன பார்த்தார்? என தெரியவில்லை.

விரோதிகள்
ஹவாலா கும்பல்?
ஆனால் வில்சனுக்கு தனிப்பட்ட முறையில் யாரும் விரோதிகள், பகையாளிகள் இல்லையாம்.. இது முதற்கட்டமாக இப்போது தெரியவந்துள்ளது. மேலும் அந்த காரின் ரிஜிஸ்டிரேஷன் நம்பரும் போலியானதாம்.. இது சம்பந்தமாக மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத், கலெக்டர் பிரசாத் ஆகியோர் விரைந்து வந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.. இரு மாநில எல்லை பகுதியாக இருப்பதால், ஹவாலா கும்பலுக்கு தொடர்பு உடைய கும்பலா அல்லது கடத்தல் கும்பலா என தெரியவில்லை..

விசாரணை
தீவிரவாதிகள்?
அதுவும் இல்லாமல், பெங்களூரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை தமிழக கியூ பிரிவு உளவுத்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் என தமிழக போலீசார், தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.. அதனால், நம் போலீசாரை அச்சுறுத்தும் விதமாககூட, இந்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இப்படி ஒரு தாக்குதலை நடத்தியிருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

கன்னியாகுமரி
பள்ளிவாசல்
இதைதவிர, கன்னியாகுமரியில் பதுங்கியிருப்பதாக கூறப்பட்ட தௌஃபீக், சமீம் ஆகியோர்கூட இந்த காரியத்தில் இறங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு வலுத்துள்ளது. எனினும் எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை.. ஆனால் 2 மர்மநபர்கள் வில்சனை கொன்றுவிட்டு எதிரே உள்ள பள்ளிவாசலுக்குள் நுழைந்து தப்பித்து செல்லும் சிசிடிவி பதிவுகளை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளார்.

முகமூடி
சிசிடிவி காட்சி
அதில் ஒரு பள்ளிவாசல் உள்ளது.. இரவு 9.15 என்பதால் ரோட்டில் வண்டிகள் போய் கொண்டிருக்கின்றன.. பள்ளிவாசல் வெளியிலும் டூவீலர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.. அப்போது 2 பேர் திபுதிபுவென பள்ளிவாசலுக்குள்ளே ஓடி வருகிறார்கள்.. அவர்கள் தலையில் குல்லா உள்ளது.. 2 பேருமே முகமூடி அணிந்திருக்கிறார்கள்.. பேண்ட், சட்டை போட்டுள்ளனர்.. இந்த பள்ளிவாசலில் நுழைந்துதான் அவர்கள் 2 பேரும் தப்பி உள்ளனர்.. போலீஸ்காரரை சுட்ட கொன்றுவிட்டு 2 பேர் தப்பி ஓடும் இந்த காட்சி பொதுமக்களை நடுங்க வைத்துள்ளது.

அடக்கம்
சன்மானம்
மேலும் இந்த கொலையாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வில்சனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், வில்சனின் உடம்பில் கத்தி குத்து காயங்கள் இருந்தாக கூறப்படுகிறது. வந்தவர்கள் துப்பாக்கியால்தான் சுட்டார்கள் என்று கருதிய நேரத்தில், வில்சனை அவர்கள் கத்தியாலும் தாக்கி உள்ளது பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

கத்தி குத்து
காயங்கள்
3 இடங்களில் அதாவது, கழுத்து, மார்பு, தொடை பகுதியில் குண்டுகள் பாய்ந்திருந்தன. குண்டு காயங்கள் தவிர உடலில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்களும் இருந்தன. துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்ல வேண்டிய நோக்கமும் புரியவில்லை. ஆனால் கொடூரமாக கொல்ல வேண்டும் என்றே அவர்கள் வந்துள்ளனர் என்பது மட்டும் யூகிக்க முடிகிறது.

அஞ்சலி
அரசு மரியாதை
இன்று மாலை, மார்த்தாண்டம் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் உள்ள சிறிய ஆலயத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வில்சனின் உடல் வைக்கப்பட்டது.. இதையடுத்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.