
துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில்
கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி,
பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச்
செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டது என
தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து
வருகின்றனர். ஆனால் ரஜினியோ நான் செய்தித்தாளில் வந்ததைதான் பேசினேன்
இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என தெரிவித்துளார்.

No comments:
Post a Comment