Latest News

எங்க "கூட்டணி" செம ஸ்டிராங்.. அண்ணன் செந்தில் பாலாஜியுடன்.. டூவீலரில் போன ஜோதிமணி.. வைரல் போட்டோ!

சென்னை: கூட்டணி உடைகிறது என்ற பரபரத்த பேச்சுகளுக்கு நடுவே இன்று முக ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார் கேஎஸ் அழகிரி.. நாங்கள் ஒற்றுமையாகதான் இருக்கிறோம் என்று வலியுறுத்தி அழகிரி சொல்லி உள்ள நிலையில், திடீரென ஒரு போட்டோ வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது. காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தன்னுடைய பாசத்திற்குரிய சகோதரர் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜியுடன் டூவீலரில் ஒன்றாக செல்லும் போட்டோதான் அது!

எதனால், யாரால், ஏன் அப்படி ஒரு அறிக்கையை "கேஎஸ்" அழகிரி விடுத்தார் என்று இப்போது வரை தெரியவில்லை.. ஆனால் அதெல்லாம் அழகிரி - ஸ்டாலின் சந்திப்புக்குப் பிறகு "கேஸ்" போல போயே போய் விட்டது.. இருப்பினும் அந்த அறிக்கையின் தாக்கம் புயல்போல அரசியல் களத்தை ஆட்கொண்டுவிட்டது உண்மைதான்.

கூட்டணி தர்மத்தை திமுக மீறிவிட்டது என்ற வார்த்தைகளை அள்ளி தெளித்துவிட, அதற்கு துரைமுருகன் எதிர்வினையாற்ற.. அதன் விளைவு எங்கெங்கோ தடம் மாறி செல்ல ஆரம்பித்தது. கூட்டணி முறிகிறதா, கூட்டணி உடைகிறதா, கூட்டணியில் பிளவா, என்ற பல கேள்விகள் சலசலப்புடன் எழுந்து வந்த நிலையில், இன்று திடீரென திமுக தலைவரை நேரில் சந்தித்து பேசினார் தமிழக காங்கிரஸ் தலைவர்.. "கருத்தியல் ரீதியாக திமுக - காங்கிரஸ் பெரும் ஒற்றுமையுடன் இருக்கிறது.. தொடர்ந்து கூட்டணி அமைத்து செயல்படுவோம்" என்று அழகிரி தெளிவுபடுத்தியதுடன், நிலவி வரும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

செந்தில்பாலாஜி
ஜோதிமணி
இந்த சமயத்தில்தான், இணையத்தில் செந்தில் பாலாஜி- ஜோதிமணியின் போட்டோ ஒன்றை வைரலாக்கி வருகிறார்கள்.. இது சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோதான்.. எம்பி தேர்தலின்போது, ஆரம்பம் முதலே தேர்தல் கமிஷன், மாவட்ட நிர்வாகம், போலீஸ் தரப்பில் என ஜோதிமணிக்கு குடைச்சல் இருந்தது. இதனால் ஜோதிமணியால் கரூரில் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஸ்டாலினின் பரிந்துரைப்படி, செந்தில்பாலாஜி ஜோதிமணிக்காக களம் இறங்கினார்.

தலையீடு
சகோதர பாசம்
செந்தில்பாலாஜி. ஜோதிமணி பக்கத்தில் வந்து நின்றதும், அவரது தலையீட்டால் நிலைமை ஓரளவு அடங்கியது. ஜோதிமணியும் போகும் இடமெல்லாம் அண்ணன் செந்தில் பாலாஜி என்று பாசம் காட்டினார். செந்தில் பாலாஜியும் தனது சகோதரிக்காக ஓட்டு போட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.

அதேபோல, அரவக்குறிச்சியில் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் செந்தில்பாலாஜிக்காக வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்தார் ஜோதிமணி. வேட்பு மனு தாக்கலின்போதும் கூட பாசக்கார தங்கச்சியாக, செந்தில் பாலாஜி அருகே அப்படி ஒரு ஆர்வத்தோடு அவர் அமர்ந்திருந்தது இன்னும் தொகுதி மக்கள் மறக்கவில்லை. கட்சி கூட்டங்களுக்குகூட இவர்கள் ஒன்றாகத்தான் சென்று வருகிறார்கள்.

அமெரிக்கா
தாய் - தந்தை
சமீபத்தில் அமெரிக்கா கிளம்பிய ஜோதிமணிக்கு சென்னை ஏர்போர்ட்டில் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்த செந்தில் பாலாஜி, உடனே ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், "சர்வதேச அளவில் " பெண் அரசியல்வாதிகள் " பங்கேற்க்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்காவிற்கு செல்லும், நமது பாராளுமன்ற உறுப்பினர் S.ஜோதிமணி அவர்கள் வெற்றிமகளாக திரும்ப வேண்டும் என, தாய் தந்தை ஸ்தானத்தில் இருந்து, அன்போடு வாழ்த்திய போது" என்று பதிவிட்டு வேறு லெவலுக்கு பாசத்தை கொண்டு போய் விட்டார் செந்தில் பாலாஜி.

டூவீலர்
வைரல் போட்டோ
அண்ணன் என்ற பாசத்தையும் தாண்டி, தாய்-தந்தை ஸ்தானத்திற்கே செந்தில்பாலாஜி சென்றுவிட்டதை அனைவருமே மறந்திருக்க முடியாது. இவர்கள் இருவரும் ஒரு டூவீலரில் செல்லும் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த போட்டோவில், பாசப்பறவைகள் இப்படி செல்வதை தொகுதி மக்கள் பூரிப்புடன் பார்த்து மகிழ்கிறார்கள்.. திமுக - காங்கிரஸ் ஒற்றுமையாக உள்ளது என்ற அழகிரியின் பேச்சை தொடர்ந்து, இந்த போட்டோ வைரலாவது கூர்ந்து கவனிக்கத்தக்கது!
ஜெயக்குமார்
பாச பறவைகள்
காங்கிரஸ் - திமுக இடையேயான உறவு என்பது உடைந்த கண்ணாடி போன்றது என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தாலும்.. கட்சியையும் தாண்டி, இவர்களின் கூட்டணியையும் தாண்டி... இந்த அண்ணன் - தங்கை டூவீலரில் செல்லும் போட்டோ என்னமோ மக்கள் மனதில் அப்படியே ஒட்டிக் கொண்டுவிட்டது!

source: oneindia.com
Dailyhunt

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.