
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) விவகாரத்தில்
உடன்பாடு எட்டப்படாததால் பாஜகவின் கூட்டணியில் உள்ள அகாலி தளம் தில்லி
பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ளது.
பாஜகவின்
கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலி தளம் கட்சி குடியுரிமைத்
திருத்தச் சட்டத்தில் (சிஏஏ) முஸ்லிம் மதத்தையும் இணைக்குமாறு மத்திய அரசை
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேசமயம், தேசிய குடிமக்கள்
பதிவேட்டுக்கும் (என்ஆர்சி) அகாலி தளம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில்,
தில்லி பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக மற்றும் அகாலி
தளம் கட்சிகளுக்கிடையே கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் அகாலி தளத்துக்கு 3 இடங்கள்
வரை வழங்கப்படும் என பாஜக உறுதியளித்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், சிஏஏ
மற்றும் என்ஆர்சி விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அகாலி தளம்
மறுத்துள்ளது.
இதன் காரணமாக, தில்லி பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என அகாலி தளம் முடிவு செய்துள்ளது.
அகாலி
தளம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்திருப்பதன் மூலம், தேசிய
ஜனநாயகக் கூட்டணியின் வாக்குகள் பிரிவதற்கான சூழல் ஏற்படவில்லை. எனவே, இது
பாஜகவுக்குப் பெரிய அளவிலான பின்னடைவை ஏற்படுத்தாது என
எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லியில் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
முன்னதாக,
2015 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அகாலி தளம் 2
தொகுதிகளில் சொந்த சின்னத்திலும், 2 தொகுதிகளில் பாஜக சின்னத்திலும் என
மொத்தம் 4 தொகுதிகளில் போட்டியிட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுப்பின்படி தில்லி மக்கள் தொகையில் சீக்கிய மதத்தைப்
பின்பற்றுபவர்கள் 4.43 சதவீதமாகும்.
No comments:
Post a Comment