
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில்
நடைபெற்ற போராட்டத்தில் காவலர்கள் நடத்திய தடியடியை கண்டித்து மதுரை
மகபூப்பாளையம் ஜின்னாதிடல் பகுதியில் நேற்று இரவு முதல் தொடங்கிய
போரட்டமானது இன்றைய இரவிலும் நீடிக்கிறது. ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்கள்
உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனால் பதட்டமான சூழல் நிலவுவதால்
அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். CAAவை திரும்ப பெற
வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை
எழுப்பவருகின்றனர்.

குடியுரிமை
திருத்தச் சட்டத்தை எதிர்த்து, நேற்று பழைய வண்ணாரப்பேட்டையில்
இஸ்லாமியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாக அவர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார்
அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் போலீசார் , மற்றும்
போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடந்தது.
இதில் 120 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து பெண்கள் உள்பட பலரும்
பல்வேறு இடங்களில் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment