
டெல்லி பாஜன்பூர் நகரைச் சேர்ந்தவர் ஷாம்பூநாத் (வயது43). மனைவி
மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது பூர்வீகம் பீகார்.
பிழைப்புத்தேடி 20வ ருடங்களுக்கு முன்பு டெல்லி வந்துள்ளார். திருமண ஆன
பின் டெல்லியில் நிரந்தரமாக தங்கியுள்ளனர். கடந்த சில நாள்களாக ஷாம்பூநாத்
வீடு பூட்டியே காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து
துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள்
போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்த போலீஸார் கதவை உடைத்து
வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அவர்கள் கண்ட காட்சி
அதிரவைத்துள்ளது.

உடல் அழுகிய நிலையில் 5 பேர் சடலமாக கிடந்துள்ளனர்.
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடல்களை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த சடலங்கள் ஷாம்பூநாத்
மற்றும் அவரது குடும்பத்தினர் என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், " ஷாம்பூநாத்
இந்த பகுதிக்கு வந்து 5 மாதங்கள்தான் ஆகிறது. மனைவி மற்றும் குழந்தைகளுடன்
வசித்து வந்துள்ளார். குழந்தைகள் மூவரும் பள்ளிப்படிப்பு படித்து
வந்துள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு ஜூஸ் கடை நடத்தி வந்துள்ளார்.
இப்போது ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க
வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வந்துள்ளார்.
இரவு
11 மணியளவில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக
அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததையடுத்து நாங்கள் அங்கு விரைந்தோம். வீடு
வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 5 பேரும்
சடலமாக கிடந்தனர். உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனை வைத்து
பார்க்கும்போது சம்பவம் நடந்து 5 நாள்கள் இருக்கும் எனத் தெரிகிறது.
வீட்டில்
இருந்து சுத்தியல் மற்றும் ரம்பம் உள்ளிட்ட சில பொருள்களை
கைப்பற்றியுள்ளோம். வீட்டின் உள்பக்க கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
ஷாம்பூநாத் மட்டுமே மொபைல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். மற்றவர்களிடன்
போன் எதுவும் இல்லை. உறவினர்களிடம் விசாரித்ததில் இவர்களுக்கு பணப்பிரச்னை
இருப்பதாக தெரியவில்லை. சடலங்கள் வெவ்வேறு அறைகளில் இருந்தது. குழந்தைகள்
மூவரும் ஒரு அறையிலும் ஷாம்பூநாத் மற்றும் அவரது மனைவி மற்றொரு அறையில்
சடலமாக கிடந்தனர்.
வீட்டில்
கொள்ளை போனதற்கான எந்த தடயங்களும் இல்லை. இது கொலையா? அல்லது தற்கொலையா?
என்பது குறித்தும் இப்போதைக்கு தெரியவில்லை. உடல்கள் அழுகியிருந்ததால்
காயங்கள் எதுவும் எங்களால் அடையாளம் காணமுடியவில்லை. ஷாம்பூநாத்தே தன்
குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டாரா என்ற
கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்த வழக்கில் பிரேத பரிசோதனை
அறிக்கைக்கு பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்" என்றனர்
No comments:
Post a Comment