
தானே:
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் பகுதியில் உள்ள 21
தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து
ஏற்பட்டது. 20வது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் இந்த
தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று
கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அந்த
கட்டிடத்தை குளிர்விக்கும் பணி நடைபெற்றது. உயிரைப் பொருட்படுத்தாமல் தீயை
அணைக்கும் பணியில் ஈடுபட்டபோது, 7 தீயணைப்பு வீரர்களுக்கு பலத்த தீக்காயம்
ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை
அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment