
தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு வேலைகள் வெகு விமர்சையாக
நடைபெற்று வருகின்றன. ஆயிரம் ஆண்டுக்கு மேல் கம்பீரமாக நிற்கும் கோவிலில்
கோபுர அலங்கார வேலைகள் மிகச்சசிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. வண்ண வண்ண
அலங்கார விளக்குகள் முதல் சோழர் கால ஓவியங்கள் வரை பார்ப்போரை மயங்கச்
செய்து வருகிறது.

இந்நிலையில்
கோவில் பிராதான கோபுர விமானத்தை தவிர மற்ற அனைத்து கோபுரங்களிலும் அதிக
வண்ண விளக்குகளால் அலங்கரிக்க பட்டிருப்பதால் பிரதான கோபுரம் மற்றும் சற்று
பொலிவிழந்து காணப்பட்டது.
கோவிலுக்கு வருகை தரும் மக்கள் கோபுரம் பொலிவிழந்து காணப்படுவதை பார்த்து சற்று வருத்தமாகினர்.
இதையறிந்த
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நானே ஒளிஅமைத்து தருகிறேன் என்று வேலைகளை கையில்
எடுத்து மின்னல்வேகத்தில் பணிகளை செய்து முடித்திருக்கிறார். இதை அவர்
சொந்த செலவில் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகா, சசிகுமார் நடித்து
வரும் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
படப்பிடிப்பு தஞ்சைக்கு அருகில் நடந்து வருவதால் கோவிலுக்கு வருகை
புரிந்திருக்கிறார்.
மாவட்ட
ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் கோவில் வேலைகள் மேற்பார்வை நடைபெற்று
வருகிறது. வேல்ராஜின் ஒளி அமைப்பை பார்த்து வியந்த ஆட்சியர் மின்னல்
வேகத்தில் முடித்து கொடுத்த அவரது திறமையையும் மெச்சினார்.
இதுகுறித்து வேல்ராஜ் கூறும் போது "இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்னுடைய பாக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment