எதிர் வரும் மார்ச் 30-ம் தேதி முதல் வாரத்திற்கு 4 நாட்கள் அபுதாபி - திருச்சிராப்பள்ளி நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்குகிறது.
அமீரகத் தலைநகர் அபுதாபியில் இருந்து தமிழகத்திற்கு நேரடி விமான சேவை மிக அவசியத் தேவை என்பதை உணர்ந்து பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தும், அதற்கான பணிகளை பின் தொடர்ந்தும் அய்மான் சங்கம் போராடி வந்தது.
சமூக ஆர்வலர்.அதிரை ஜனாப்.முகமது மாலிக் (TIYA) அவர்களும் இதற்காக தனி ஒருவராக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.அய்மான் சங்கத்தோடு இணைந்தும் இம்முயற்சியை வேகப்படுத்தியதில் அதிமுக்கியமானவர் TIYA முகமது மாலிக் அவர்கள்.
இம்முயற்சிக்கு தாயகத்தில் இருந்து உரிய ஆலோசனைகளை வழங்கி கோரிக்கை வெல்ல துணை புரிந்தவர் விமானத்துறை ஆய்வாளர் சகோதரர்.உபைதுதுல்லாஹ் அவர்கள்.
மத்திய அரசுக்கு இக்கோரிக்கையை அய்மான் சார்பில் நேரடியாக சமர்ப்பித்த ஏர் இந்தியா முன்னாள் அபுதாபி மண்டல மேலாளர் திரு.நவீன் குமார்,அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப்.அப்துல் ரஹ்மான் Ex MP, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி MP,திரு.திருச்சி சிவா MP,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப்.நவாஸ் கனி MP,காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திருநாவுக்கரசர் MP ஆகியோருக்கு அமீரகத் தமிழர்கள் சார்பிலும்,அமீரகத் தமிழ் அமைப்புகள் சார்பிலும் நெஞ்சம் நிறைந்த நன்றியை மகிழ்ச்சியுடன் உரித்தாக்குகிறோம்.

இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்க்ளின் அழைப்பின் பேரில் அமீரக தமிழ் மக்கள் மன்ற நிர்வாகிகளும்,அய்மான் சங்க நிர்வாகிகளும் தலைநகர் டெல்லி செல்லவும் ஆயத்தமாக இருந்த நிலையில் மகிழ்ச்சிக்குரிய செய்தி வந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்!
எதிர் வரும் மார்ச் 30-ம் தேதி முதல் வாரத்திற்கு 4 நாட்கள் அபுதாபி - திருச்சிராப்பள்ளி நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்குகிறது.
திங்கள்,புதன்,வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இயங்கும்.
அபுதாபி புறப்பாடு நேரம்: 05:35 திருச்சி வருகை நேரம்: 11:05திருச்சி புறப்பட்டு நேரம்: 01:30 அபுதாபி வருகை நேரம்: 04:35
ஏற்கனவே அபுதாபி - திருச்சி சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கியது போதுமான பயணிகள் அதில் பயணிக்காததால் நிறுத்தப்பட்டதை கவனத்தில் கொண்டு அபுதாபி மற்றும் அமீரகத்தில் வாழும் தமிழ் மக்கள் இச்சேவையை பயன்படுத்தி விமானம் தொடர்ந்து இயங்கிட ஆதரவு தர வேண்டி,விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment