Latest News

சென்னையில் பாரம்பரியக் பழமையான மிகப்பெரிய அரண்மனை...!

தமிழகத்தில் சென்னை திருவல்லிக்கேணி என்றதும் நம் நினைவுக்கு வருவது கோவில் தலங்கள் தான். ஆனால் அங்கு ஒரு பிரம்மாண்டமான ஓர் அரண்மனையும் உள்ளது. அரண்மனை என்றதும் மதுரையில் உள்ள மிக பழமையான மகால் நினைவுக்கு வரும். ஆனால் சென்னையிலும் பழமையான மகால் உள்ளது, அதுதான் அமீர் மகால்.
அமீர் மகால் 1789 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1870ல் ஆற்காடு நவாப் மற்றும் அவரது குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ மாளிகையானது. இந்த அரண்மனை 1798 ஆம் ஆண்டில் இந்தோ-சரசெனிக் கட்டடக்கலையில் பிரித்தானிய கட்டடக்கலை வல்லுனரான ராபர்ட் சிஸ்ஹோல்ம் என்பவரால் கட்டப்பட்டது. ஆற்காடு நவாப்களின் கலைத் திறனின் சாட்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் இந்த மாளிகை கம்பீரம் ஒளிர அமைக்கப்பட்டிருக்கிறது. 

அரண்மனையானது மிகப்பெரிய கோட்டைச்சுவரால் சூழப்பட்டுள்ளது. இந்த அரண்மனையானது 70 அறைகளைக் கொண்டு மிக பிரமாண்டமாக அமைந்துள்ளது. அரண்மனையின் உள்ளே நுழையும் நுழைவாயிலின் இருபுறங்களிலும் இரு கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்களின் மேற்பகுதியில் நகர கானா எனப்படும் முரசு மண்டபம் உள்ளன. வாயிலில் நுழைந்து அரண்மனைக்குச் செல்லும் பாதையோரமாக நவாப்புக்கு அரசு வழங்கிய பீரங்கி வண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. 

மஹாலானது அதன் ஒவ்வொரு பகுதியும் கலை நுணுக்கத்துடன் தூண்கள், பலிங்குத் தரை போன்றவற்றுடன் கட்டப்பட்டுள்ளது. நவாப் அரசர்களின் கலை மனங்களை இந்த மகாலின் கலையெழில் கொஞ்சும் தூண்களே சொல்லும். இங்கு வந்து பார்த்தவர்கள் பரவசம் கொள்ளாமல் திரும்பவே முடியாது. அமீர் மஹால் உள்ளே அழகிய சிறிய துடுப்பு போன்ற மைதானமும் உள்ளது. முஸ்லிம் மன்னர்களின் மனத்திற்குரிய மகாராணிகள் தம் கனவுகளை அடைகாத்த அந்தப்புரங்கள் இந்த மகாலில் இருக்கின்றன. அரண்மனை உள்ளே அழகிய பீங்கான் பாத்திரங்கள், பூ வேலைப்பாடுகள் கொண்ட திரைச்சீலைகள், பட்டுநூலால் எழுதப்பட்டுள்ள இஸ்லாமிய இறை வசனங்கள், உள்ளே தொங்கும் அரேபிய சார விளக்குகள் போன்றவை உள்ளன.
மகாலின் உள்ளே அமைதியாகவும், சாண்ட்லியர் விளக்குகளால் மஞ்சள் வெளிச்சம் பளீர் என்று இருக்கிறது. நடந்து செல்லும் வழியெங்கும் சிகப்பு கம்பளம் போடப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமான தூண்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையில் உள்ள படிகட்டுகளில் ஏறும் போது இருபுறமும் இரண்டு நீளத் துப்பாக்கிகளும் தூண்களில் மாட்டப்பட்டுள்ளது. அரண்மணையின் உள்ளே நீண்ட அறை, தர்பார் மஹால், நடுவில் அரசருக்கான பீடம், மேற்கத்திய கம்பளங்களால் அறை நிறைந்திருக்கிறது. நவாப்கள் மற்றும் இளவரசர்களின் ஓவியங்கள் சுவற்றில் மாற்றப்பட்டுள்ளன. மேலும் அரண்மனை சுவர்களிலில் நவாப்களின் ஓவியங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் தர்பார் மண்டபமும், அதற்குப் பின் பகுதியில் மிகப்பெரிய பொது விருந்து அறையும் உள்ளது. அரண்மனைச் சுவரின் உயரத்தில் குறுவாள்கள், கத்திகள், போன்றவை மாட்டப்பட்டுள்ளன. மகாலின் அழகு தோற்றம் ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. இப்படி பல சிறப்புகளை சொல்லிகொண்டே போகலாம். கொஞ்ச நேரம் நீங்களும் ஒரு மன்னராக உலா வந்து பார்க்க ஒரு வசதியாக அமைந்துள்ளது அமீர் மகால். அரண்மனையில் ஏற்படும் பெரிய பழுதுகளை இந்திய ஒன்றிய அரசு தன் செலவில் பழுதுபார்த்து பராமரித்து வருகிறது. தற்போது முன் அனுமதி பெற்றுவரும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் எல்லோரும் சுற்றிபார்க்க அனுமதி அளிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.