
மத்திய அரசின் 2020-21 பட்ஜெட் மிக நீண்ட பட்ஜெட்டாக
இருந்த போதிலும், உறுதியான எந்தத் தீர்வும் இல்லை என்று திமுக எம்.பி.
கனிமொழி தெரிவித்துள்ளார்.
2020-21-ஆம் நிதியாண்டுக்கான
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று
தாக்கல் செய்து உரையாற்றினார்.
இந்நிலையில், 2020-21 பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு.வருகின்றனர்.
திமுக
எம்.பி கனிமொழி இதுகுறித்து, 'உறுதியான தீர்வுகளை அளிக்காத, மிக நீண்ட
பட்ஜெட் உரை' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோன்று நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர்
டி.ஆர்.பாலு, 'அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய
பட்ஜெட் வெற்று அறிக்கை. விவசாயத்துக்கு அதிக நிதி ஒதுக்கவில்லை.
வேலைவாய்ப்பை பெருக்க மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை' என
கருத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment