
உச்ச நீதிமன்றம் தற்போது மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்பது
உண்மை. மற்ற வழக்குகளுக்கு முன்பாக, நீதித்துறை சம்பந்தப்பட்ட ஒரு
விஷயத்தையே பார்ப்போம். கொலிஜியம் முறையில்தான் நீதிபதிகளின் நியமனங்கள்
நடைபெற்றுவருகின்றன. மூன்று தலைமை நீதிபதிகள் தலைமையிலான கொலிஜியம்
பரிந்துரைத்த கர்நாடக நீதிபதி பட் நியமனத்தை, மத்திய அரசு இன்று வரை
அமல்படுத்தவில்லை. தங்களுடைய விவகாரங்களிலேயே நீதித்துறை உறுதித்தன்மையைக்
காட்ட முடியாதபோது, மக்கள் பிரச்னையில் தீர்வளிக்கும் என நம்ப முடியவில்லை.
ஆறு
மாதங்களுக்குமேல் ஆகியும் இன்று வரை காஷ்மீர் வழக்கின் நிலை என்ன எனத்
தெரியவில்லை. காஷ்மீரின் மூன்று முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட
அரசியல்வாதிகள் சிறைவைக்கப்பட்டுள்ள வழக்கிலும் உச்ச நீதிமன்றம்
தீர்வளிக்கவில்லை.
அதேபோல் இணையத் தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில்
தொடரப்பட்ட வழக்கில், இணையத் தடையை நீக்குவதற்கு உத்தரவிடாமல் அதனை அரசின்
பரிசீலனைக்கே விட்டுவிட்டது உச்ச நீதிமன்றம். அரசு படிப்படியாக இணையத்தடையை
நீக்குகிறதே ஒழிய முழுமையாக நீக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, மக்களுக்கு
நீதித்துறையின் மீதிருந்த நம்பிக்கை மிகவும் குறைந்துள்ளது.
முன்னாள்
நீதிபதி ஏ.பி.ஷா, 'சி.ஏ.ஏ விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முற்றிலுமாக
மௌனமாகிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் குரலே இல்லாமல் போய் விட்டது' என
எழுதியுள்ளார். சிவில் உரிமைச் செயற்பாட்டாளர் கல்பனா கண்ணபிரான், 'சி.ஏ.ஏ
விவகாரத்தில் நீதியை வழங்க வேண்டிய அமைப்புகள் (உச்ச நீதிமன்றம்)தான்
தற்போது விசாரணைக் கூண்டில் இருக்கின்றன' என எழுதியுள்ளார். உச்ச
நீதிமன்றத்தின் அணுகு முறையை, இதைவிட தெளிவாக எடுத்துரைத்துவிட முடியாது.
'உச்ச
நீதிமன்றம், உரிமைகளுக்கான நீதிமன்றமாக இல்லாமல் நிர்வாகத்துக்கான
நீதிமன்றமாக மாறிவருகிறது' என வழக்கறிஞர் கௌதம் பாட்டியா எழுதியுள்ளார்.
சி.ஏ.ஏ வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் காலவரையின்றி தள்ளிவைத்துள்ளது.
சில வழக்குகளை விசாரிக்காமல் தவிர்ப்பதன் மூலமே அந்த வழக்குகள்
தீர்மானிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவது உண்மையாகிவருகிறது.
- சி.ஏ.ஏ வழக்குகளை உச்ச நீதிமன்றம் அணுகுவதில் உள்ள சில சிக்கல்கள் இவைதான்... > முன்னாள்
நீதிபதி அரிபரந்தாமனின் முழுமையான பார்வையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க
> சி.ஏ.ஏ விவகாரம்... உச்ச நீதிமன்றம் எதிர்கொள்ளும் சவால்!
https://www.vikatan.com/government-and-politics/judiciary/justice-hariparanthaman-about-caa-case-in-sc
இடஒதுக்கீடு ரத்து... சமூகநீதிக்கு சாவுமணி!
'மாநில அரசுப் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை' என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நாட்டையே அதிரவைத்திருக்கிறது.
2012-ம்
ஆண்டு உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் அரசு, மாநில அரசுப் பணிகளில் எஸ்.சி -
எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமலேயே காலிப்பணியிடங்களை
நிரப்பியது. அதைத் தொடர்ந்து, 2017-ல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசும்,
காங்கிரஸ் அரசின் உத்தரவையே நடைமுறைப்படுத்தியது. இதனால்
பாதிக்கப்பட்டவர்கள், மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அரசின்
உத்தரவை ரத்துசெய்ததுடன், இடஒதுக்கீட்டைப் பின்பற்றும்படியும்
உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்தது உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க அரசு. அந்த வழக்கில்தான் இப்படி ஒரு
தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது பல்வேறு தரப்பினரிடையே கடும்
விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.
''இடஒதுக்கீடையே ஒழிக்கும் முயற்சி!'' என்கிறார் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசியச் செயலாளர் அனிஸ் அகமது.
''இது
சமூகநீதிக்கு எதிரானது!'' என்கிறார் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர்
செ.கு.தமிழரசன். அதேவேளையில், ''இந்த விவகாரத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க என
இரண்டு கட்சிகளுமே சமூகநீதிக்கு எதிரான அரசியல் செய்துவருகின்றன''
என்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன். ஆனால், ''எங்களை குறை
சொல்லாதீர்கள்!'' என்றும் காங்கிரஸ் தரப்பும், ''இடஒதுக்கீட்டுக்கு
எதிரானதல்ல எங்கள் கட்சி!'' என்று பா.ஜ.க தரப்பும் சொல்கின்றனர்.
No comments:
Post a Comment