டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு
எதிரொலியால் சர்வதேச கடற்படை கூட்டுப்பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் வூஹானில் கொரோனா
எனும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்தக் காய்ச்சல், இன்று உலகம்
முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை
3,056 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டும் 2,943 பேரும், இதர நாடுகளில் 113
பேரும் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 89,527 பேர் காய்ச்சலால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசியாவைத் தாண்டி அமெரிக்கா, தென் கொரியா, இத்தாலி, ஈரானில் நோய் வேகமாக பரவி வருவதால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளாவிய இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 70 நாடுகளில் கொரோனா பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்கனவே 3 ஆக இருந்த நிலையில் தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா எதிரொலியால் சர்வதேச கடற்படை கூட்டுப்பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் மார்ச் 18-ம் தேதி நடைபெற இருந்த சர்வதேச கடற்படை கூட்டுப்பயிற்சியான, 'மிலன்' ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா அறிகுறியுடன் வரும் நபர்களுக்கு தனிப்பிரிவை ஏற்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், வரும் நாட்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 2,500 பேருக்கான தனிப்பிரிவுகளை ஏற்படுத்த முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment