
கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும்
2000 ரூபாய் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
தெரிவித்துள்ளார்.
கொரோனா
வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே
வருவதைத் தவிர்க்கவில்லை. உயிரைப் பற்றி கவலைப்படாமல் புதுச்சேரி மக்கள்
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து காவல்துறையினரிடம் சண்டைபோட்டு,
தகராறில் ஈடுபடுகின்றனர். மக்களின் இத்தகைய செயல் மிகவும் வேதனை அளிக்கிறது
என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் மக்கள்
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
newstm.in
No comments:
Post a Comment