
கட்சித் தொடங்கி ஆட்சியைப் பிடித்தால் யார் முதலமைச்சராக வருவார்கள்
என்பது பற்றி விரைவில் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட உள்ளதாக செய்திகள்
வெளியாகி உள்ளன.
சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் தயாராகி வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கூறி வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கட்சி தொடங்கி நடத்தி வரும் கமலுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் முதல்வராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் பதவி ஏற்க ரஜினிகாந்த் விரும்பவில்லை என்று செய்தி வெளியாகி உள்ளது. வேறு ஒருவரை முதல்வராக அமரவைத்து பின்னால் இருந்து பணியாற்ற ரஜினிகாந்த் விரும்புவதாக கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் முடிவை ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பா.ஜ.க சார்பு நிலையிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பு ரஜினிக்கு நிறைவைத் தரவில்லை. தான்
கூறியதை அப்படியே ஏற்பார்கள் என்று எதிர்பார்த்தால், பா.ஜ.க சார்பு
வேண்டாம், நீங்கள்தான் முதல்வராக வர வேண்டும் என்று பல விஷயங்களில்
ரஜினியின் கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துள்ளது அவருக்கு
குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவர் சிந்தித்து வருவதாக
கூறப்படுகிறது. தனக்கு நெருக்கமானவர்களிடமும் ஆலோசனை கேட்டு வருகிறாராம்.
இதுவரை வீட்டு வாசலில் வைத்து பேட்டி அளித்ததை மாற்றி, மிகப்பெரிய செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளாராம் ரஜினி. அப்போது தன்னுடைய நிலைப்பாடு, முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. கட்சியே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் முதல்வர் பதவிக்கு போட்டியா என்று மற்ற கட்சியினர் நகைத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment