கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை
ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மெல்ல மெல்ல நோய்த்தொற்று பரவத்
தொடங்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்
இறங்கியுள்ளன. தனிநபர் சுகாதாரத்தில் பொதுமக்கள் அக்கறை
எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான
மருந்துகள் இதுவரை கண்டறியப்படாததால் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி
அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்
அதிகாரியின் மகன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான முதல்நபர் என்ற இவர் எனத்
தெரியவந்துள்ளது.
கொரோனா
அந்த இளைஞர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்துவருகிறார்.
இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். அவரின்
தந்தை ஒரு மருத்துவராக உள்ளார். கொல்கத்தா விமானநிலையத்தில் அவர்
தரையிறங்கும்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான எந்த அறிகுறியும்
இல்லை. மேலும், விமானநிலையத்தில் ஸ்கீரின்ங் செய்யும்போதும் எதுவும்
கண்டறியப்படவில்லை. இதையடுத்து அவர் தன் ஓட்டுநருடன் வீட்டுக்குத்
திரும்பியுள்ளார். தன் குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்துள்ளார்.
அதன்பின்னர் நண்பர்களுடன் ஷாப்பிங் மால்கள் எல்லாம் சென்றுள்ளார்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது அவர்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் இருக்கும் அவரின்
நண்பர்கள் சிலர் அந்த இளைஞரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். இங்கிலாந்தில்
நடந்த பார்ட்டியில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது
உறுதியானது குறித்த தகவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த இளைஞர்
மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ்
இதுகுறித்து
பேசியுள்ள அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ``வி.ஐ.பி அந்தஸ்தைக் கோரி
கொரோனா சோதனைகளைத் தவிர்க்க முடியாது. யார் வருகிறார்களோ அவர்களை
வரவேற்கவும். ஆனால், நோயை வரவேற்கவில்லை. மன்னித்துவிடுங்கள். நீங்கள்
திடீரென்று வெளிநாட்டிலிருந்து வந்து சோதனை செய்யாமல் ஷாப்பிங்
மால்களுக்குச் சென்று வருகிறீர்கள். இதனால் எத்தனை பேர்
பாதிக்கப்படுகின்றனர். உங்கள் குடும்பத்தில் ஒருவர் செல்வாக்கு மிக்க நபராக
இருப்பதால் நீங்கள் பரிசோதனை செய்யாமல் இருப்பீர்களா. இதை நான் ஒருபோதும்
ஆதரிக்க மாட்டேன்.
வெளிநாடுகளிலிருந்து திரும்பும் மக்கள் விஐபி-யாக
இருந்தாலும் இல்லாவிட்டாலும் 15 முதல் 27 நாள்களுக்கு தாங்களே முன்வந்து
தனிமையில் இருக்க வேண்டும். நோய் அறிகுறிகளை கொண்ட ஒருவர்
சுற்றுப்புறத்தில் இருக்கும் மக்களை சந்திப்பதைவிட மோசமானது எதுவும் இல்லை.
அந்த நபரை வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் அவரோ
ஷாப்பிங் மால் போன்ற பொது இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இந்த நோய்
ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதினால் ஏற்படுகிறது. இந்த நோய் தொடர்புடன்
பரவுகிறது. இத்தகைய அலட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" எனக் கூறியுள்ளார்.
அந்த இளைஞரின் பெற்றோர், கார் டிரைவர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு
வங்கத்தில் கொரோனாவுக்கு எதிராகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை
மாநில அரசானது எடுத்து வருகிறது. அரசு அலுவலர்கள் ரயில் மற்றும்
பேருந்துகளில் கூட்ட நெரிசல்களில் சிக்காமல் இருக்கும் வண்ணம் அலுவலக நேரம்
மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான பணி நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு
முன்பாக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிடலாம் என அரசு
தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment