Latest News

கார் பந்தயத்தில் கட்டுப்பாட்டை இழந்து கார்கள் மோதிக் கொண்டன

புளோரிடா: கார் பந்தயத்தில் விபத்து... அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த கார் பந்தயத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்திற்குள்ளானது.

போட்டியில் வளைவு பாதையில் சுற்றி வந்த கார்கள், திடீரென ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்டன.

இதில் நான்கு கார்கள் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் தாறுமாறாக செல்ல, ஒரு கார் மைதானத்தின் நடுவே இருந்த திட்டு போன்ற அமைப்பின் மீது மோதி காற்றில் பறந்தவாறு சென்று அங்கிருந்த மற்றொரு காரின் மீது விழுந்தது.

இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.