
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் குடியிருக்கும் வங்கதேசத்தவர்கள் அனைவரும்
இந்திய குடிமக்கள் தான் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி
தெரிவித்தார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்.பி.ஆர்., உள்ளிட்ட
சட்டங்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து
வருகிறார். இந்நிலையில் காலியாகாஞ்ச் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில்
கலந்து கொண்டு பேசிய மம்தா கூறியதாவது: வங்கதேசத்தில் இருந்து வந்து
மேற்குவங்கத்தில் குடியிருக்கும் மக்கள் அனைவரும் இந்திய குடிமக்கள் தான்.
அவர்கள் புதிதாக குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவர்களுக்கு இந்திய குடியுரிமை இருக்கிறது.அவர்கள், இந்தியாவில் நடைபெறும்
அனைத்து தேர்தல்களிலும் ஓட்டு போடலாம்.
நாட்டின் பிரதமர், மாநில முதல்வரை தேர்வு செய்யலாம்.
குடியுரிமை விவகாரத்தில் ஒருவரை கூட மேற்குவங்கத்தில் இருந்து நாங்கள்
வெளியேற்ற மாட்டோம். மேற்குவங்கத்தை இன்னொரு டில்லியாக்க அனுமதிக்க
மாட்டோம். டில்லி வன்முறையை தடுக்க மோடி அரசு தவறிவிட்டது. இவ்வாறு அவர்
கூறினார்.
No comments:
Post a Comment