
மதுரை: மதுரையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி
அளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்
கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 18
பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மதுரையை சேர்ந்த
ஒருவர் இன்று (மார்ச் 25) அதிகாலை 2:30 மணியளவில் உயிரிழந்தார்.
இந்நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை
மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக சுகாதார அமைச்சர்
விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இதன்மூலம் 8வது கொரோனா பரிசோதனை மையம் மதுரையில்
அமைகிறது.
ஏற்கனவே, சென்னை (கிங்ஸ் பரிசோதனை மையம்), தேனி,
திருநெல்வேலி, திருவாரூர், கோவை, சேலம், ஈரோடு ஆகிய இடங்களில் பரிசோதனை
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment