
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க
தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இந்தியாவில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ள நிலையில்
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. மேலும்
கொரோனா வைரஸால் இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்
இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "கொரோனாவால்
பாதிக்கப்பட்டவர் வடமாநிலத்தை சேர்ந்த 20 வயது இளைஞர். அவர் ரயில் மூலம்
சென்னை வந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் யாருடன் தொடர்பில்
இருந்தார் என கண்டறிய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து
சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள்
தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment