Latest News

மகளிர் தினத்தில் பெண்களுக்கு கவுரவம்; கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம் : கேரளாவில் மகளின் தினத்தையொட்டி பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி அவர்களை கவுரப்படுத்த கேரள அரசு சில முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது.உலக மகளிர் தினம் (மார்ச் 8) நாளை கொண்டாடப்பட உள்ளது. மகளிர் தினத்தன்று பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் , பெண்களை கவுரப்படுத்தும்வகையிலும் பல நிகழ்ச்சிகளும் திட்டங்களும் செயல்படுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கேரளாவில் பெண் காவலர்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்து அவர்களை கவுரவிக்க கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக கேரள டிஜிபி லோகநாத் பெஹெரா இன்று (மார்ச் 7) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது : உலக மகளிர் தின கொண்டாட்டத்தையொட்டி கேரளாவில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் பெண் காவலர்கள் முக்கிய பொறுப்புகளை வகிக்க வேண்டும். இதன்படி அனைத்து காவல் நிலையங்களிலும் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகள், தங்கள் காவல்நிலையங்களில் உள்ள பெண் போலீசாரிடம் முக்கிய பொறுப்புகளை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை, முதல்வரின் வாகனப் பாதுகாப்பிலும் பெண் கமாண்டோக்கள் பணியில் அமர்த்தப்படுவர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, மகளிர் தினத்தன்று பெண்களை கொண்டாடும்வகையில் ரயில்கள் பெண்களால் இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான கே.கே.ஷைலாஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், (மார்ச் 8) நாளை காலை 10.15 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பும் வெனாட் எக்ஸ்பிரஸ் பெண்களால் இயக்கப்படும். லோகோ பைலட், உதவி லோகோ பைலட், பாயிண்ட்ஸ்மேன், கேட் கீப்பர் மற்றும் டிராக் வுமன் அனைவரும் பெண்களாக இருப்பார்கள்.

டிக்கெட் முன்பதிவு அலுவலகம், தகவல் மையம், சிக்னல், வண்டி மற்றும் வேகன் இயக்கம் உள்ளிட்ட பொறுப்புகளிலும் பெண் அதிகாரிகளே நியமிக்கப்பட்டிருப்பார்கள்.இந்த ரயில் பயணத்தை தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் பிரிவு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம். இவ்வாறு கூறினார்.மேலும் மாநிலத்தில் உள்ள அரசு உதவி பெறாத (தனியார் பள்ளிகளின்) ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் சலுகைகளை அனுமதிக்கும் அறவிப்புகளை அரசு இன்று அறிவித்துள்ளது. மகப்பேறு சலுகைகளை வழங்க அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்திருந்தாலும், இந்த விஷயத்திற்கு மத்திய அரசின் அனுமதி தேவை என்பதால் தாமதமானது. மையம் அனுமதி அளித்ததால், இறுதியாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது நாட்டில் முதல் முறையாக, மகப்பேறு நன்மைச் சட்டத்தின் கீழ் உதவி பெறாத பள்ளிகளின் ஆசிரியர்களை ஒரு மாநில அரசு உள்ளடக்கியுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, ஊழியர்களுக்கு 26 வாரங்கள் (6 மாதங்கள்) ஊதிய விடுப்பு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.