
டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு
ஆதரவாகவும், எதிராகவும் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்த
வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உள்பட 44 பேர்
உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், டெல்லியின்
வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 53
ஆக அதிகரித்துள்ளது. டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் 44 பேரும், ஆர்எம்எல்
மருத்துவமனையில் 5 பேரும், எல்என்ஜேபி மருத்துவமனையில் 3 பேரும், தனியார்
மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 53 பேர் பலியாகி உள்ளனர் என
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment