
தில்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையால் பாரத
மாதாவுக்கு எந்தப் பலனும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்
காந்தி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு
தில்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையால் 47 பேர் உயிரிழந்தனர்,
200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவத்துக்குப்
பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என
காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி
நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் எழுப்பி வருகிறது. இதனிடையே, காங்கிரஸ்
இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் சென்று
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் அமித் ஷாவை பதவி நீக்கக்கோரி மனு
அளித்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"இந்தப்
பள்ளி தில்லியின் எதிர்காலம். வெறுப்பும், வன்முறையும் இந்தப் பள்ளியை
சிதைத்துவிட்டது. இந்த வன்முறையால் பாரத மாதாவுக்கு எந்தப் பலனும் இல்லை.
இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்தியாவை
முன்னெடுத்து செல்ல வேண்டும்.
தில்லி வன்முறை குறித்து
விவாதம் நடத்தும் வரை நாடாளுமன்றம் வெளியே மற்றும் உள்ளே நாங்கள் எங்களது
போராட்டங்களைத் தொடருவோம்" என்றார்.
அப்போது காங்கிரஸ்
தலைவர்கள் ரண்தீப் சுர்ஜேவாலா, சக்திசின் கோஹில் மற்றும் கே.சி. வேணுகோபால்
ஆகியோரும் உடனிருந்தனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன்
சௌதரியும் உடனிருந்தார்.
No comments:
Post a Comment